மணியம்மையார், 1920 மார்ச் மாதம் 10ஆம் நாள் வேலூரில் வி.எஸ்.கனகசபை - பத்மாவதி தம்பதியருக்கு மகளாய்ப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும், கமலா என்ற ஒரு சகோதரியும் ஆவார்கள்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி என்பதாகும். அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் திராவிடர் இயக்கத் தலைவர்களில் ஒருவரான அண்ணல்தங்கோ, இவருக்கு அரசியல்மணி எனப் பெயர்சூட்டினார். அரசியல்மணி வேலூரில் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் தமிழிலக்கியம் படித்துப் புலவர் பட்டம் பெற்றார்.
வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ்.எஸ்.எல்.சி.) வரை படித்தார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் சி.டி.நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கையில் கல்வி தடைப்பட்டு விட்டது. 1936இல் வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்தபோது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியது.
செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் - தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தார். 1943 அய்யாவின் தொண்டரான அன்னை முதன்முதலாக மேடை யேறிப் பேசியது காயல்பட்டினம் அருகில் உள்ள குலசேகரப்பட்டினம் கனக நாயகம் சீதக்காதி விழா.
சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாக மாறிய மாநாட்டில் (27.8.1944) காந்திமதி என்ற கே.ஏ.மணி, கே.அரசியல் மணி என்று மாற்றப்பட்டு மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு உரையாற்றினார். அன்னையின் முதல் கட்டுரை இரண்டும் ஒன்றே - கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே என்பதாகும். பெண் கல்வி தோழர் மணியம்மை சொற்பொழிவு எனும் தலைப்பில் 19.8.1944 குடிஅரசில் வெளியானது. பாரதி விழா எனும் தலைப்பில் மணியம்மை எனும் பெயரில் எழுதிய கட்டுரை ஆகியன வெளியாயின (9.12.1944). (பிற சமயமும் நம் (இந்து) சமயமும், (12 வருடத்துக்கு முன் ஒரு இந்துப் பெண் எழுதியது, மணி தொகுத்தது கட்டுரை குடிஅரசில் (9.12.1944) தேவர்களின் காம விகாரம் - மணி திரட்டியது (குடிஅரசு 20.12.1944) அம்மாவின் முதல் வடபுலப் பயணம் - முதன் முதலாகக் கல்கத்தாவிற்கும் பின்னர் கான்பூருக்கும் பயணம் 21.12.1944 முதல் 6.1.1945 வரை, திராவிடர் கழக மாநில நிருவாகக் குழுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அம்மா முதன் முதலாகப் பங்கேற்றார்.
சீதையைப்பற்றிய நடுநிலை ஆராய்ச்சி எனும் தலைப்பில் அன்னையின் கட்டுரை (10.11.1945) அம்மாவின் முதல் வடபுலப் பயணம் - முதன் முதலாகக் கல்கத்தாவிற்கும் பின்னர் கான்பூருக்கும் பயணம் 21.12.1944 முதல் 6.1.1945 வரை, திராவிடர் கழக மாநில நிருவாகக் குழுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அம்மா முதன் முதலாகப் பங்கேற்றார்.
திராவிடர் கழக நிருவாகக்குழு கூட்டம் 23.6.1946இல் ஸ்பெஷல் அர்ஜன்ட் எக்சிக்யூடிவ் கமிட்டி மீட்டிங் அன்னையார் பங்கேற்பு. (விடுதலை 18.6.1946 நடைபெறுவதாகச் செய்தி அறிவிப்பு) 6.6.1946 முதல் வெளியிடப் பெற்ற விடுதலையில் ஆசிரியர், வெளியிடுபவர், அச்சிடுபவர் என அன்னை பொறுப்பு ஏற்றல் (1978 வரை அப்பொறுப்பை வகித்தவர் அவர்).